திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பஞ்சலிங்க அருவியின் நீர் பிடிப்புப் பகுதிகளான குருமலை, குழிப்பட்டி, ஜல்லிமுத்தான் பாறை உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், அருவியில் நீர்வரத்து அதிகரித்து காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, கோவில் நிர்வாகம் சார்பில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.