உடுமலை பஸ் ஸ்டாண்டில் புதிய கழிப்பிடம் திறக்கப்படுமா?

927பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை புதிய பேருந்து நிலையத்தில் தற்போது பழனி செல்லும் அரசு பேருந்துகளும் கிராமப்புற பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இங்கு ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால், பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறை திறக்கப்படாமல் காட்சிப் பொருளாகவே உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, கழிப்பறையை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி