உடுமலையில் தரைமட்ட பாலம் பராமரிக்கப்படுமா?

954பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட பழனி சாலையில் இருந்து பெரியார் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் ஓடையின் குறுக்கே கட்டப்பட்ட தரைமட்ட பாலம், போதிய பராமரிப்பின்றி கைப்பிடி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. பொதுமக்கள் தரைமட்ட பாலத்தில் கைப்பிடி சுவர்கள் அமைத்து பராமரிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி