திருப்பூர் மாவட்டம் உடுமலை பஸ் ஸ்டாண்டில், 11 ஆண்டுகளுக்கு முன்பு 1.5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட நடை மேம்பாலம், பல்வேறு காரணங்களால் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் சாலையைக் கடக்கும்போது விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதால், உடனடியாக மேம்பாலத்தைத் திறக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த மேம்பாலம் திறக்கப்படாமல் இருப்பது பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.