திருப்பூர் மாவட்டம் உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில் தற்போழுது 38 ஊராட்சிகள் உள்ளன. அதிக ஊராட்சிகள் சதுர கிலோமீட்டர் பரப்பில் அமைந்துள்ளதால் ஒன்றியத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என நீண்ட காலமாக பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் உடுமலை ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து எரிசனம்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஒன்றியம் உருவாக்க 2007 ஆம் ஆண்டு கருத்துரு அனுப்பப்பட்டது. ஆனால், பல ஆண்டுகள் ஆகியும் தற்போது எரிசனம்பட்டி ஒன்றியம் அமைப்பதில் காலதாமதம் ஆகின்றது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.