திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கொங்கல் நகரத்தில் சில வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட மகளிர் சுகாதார வளாகம், பணிகள் முடிந்தும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி, சுகாதார வளாகத்தை உடனடியாக திறக்க வலியுறுத்தி வருகின்றனர். ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக இந்த நிலை நீடிப்பதாகக் கூறப்படுகிறது.