உடுமலை அருகே கார் மோதி தொழிலாளி பலி

0பார்த்தது
உடுமலை அருகே கார் மோதி தொழிலாளி பலி
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தொட்டம்பட்டியைச் சேர்ந்த கருப்புசாமி, தேங்காய் உரிக்கும் வேலை செய்து வந்துள்ளார். அவர் முக்கோணம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றுவிட்டு கொங்கல் நகரம் வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, கணபதிபாளையம் பகுதியில் எதிரே வந்த அடையாளம் தெரியாத கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டார். இதில் கருப்புசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். உடுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி