
உடுமலை: அமராவதி ராணுவ பயிற்சி பள்ளியில் ஆண்டுவிழா
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி நகர் சைனிக் பள்ளியில் 64வது ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. பள்ளி முதல்வர் மணிகண்டன் தலைமை தாங்கி ஆண்டறிக்கை வாசித்தார். தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நாட்டின் பாரம்பரியம் மற்றும் வளர்ச்சியை பறைசாற்றும் வகையில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளைப் பாராட்டினார். வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை வழங்கப்பட்டது. விழாவில் திருப்பூர் மாவட்ட கல்வி அதிகாரி காளிமுத்து, உடுமலை கேந்திர வித்யாலயா முதல்வர் வளர்மதி, கோவை பொதுப்பணித்துறை மேற்பார்வை பொறியாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
































