
உடுமலையில் தலைவர்கள் சிலை மறைப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இதன் காரணமாக, நகராட்சி ஆணையாளர் விநாயகம் அறிவுறுத்தலின் பேரில், பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள காமராஜர் சிலை, உழவர் சந்தை அருகே உள்ள அண்ணா தொழிற்சங்க அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை உள்ளிட்ட பல்வேறு சிலைகள் நகராட்சி ஊழியர்களால் துணியால் மறைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்.































