திருவண்ணாமலை தீபத் திருவிழா: 24-ல் கொடியேற்றம்

6064பார்த்தது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் தீபத் திருவிழா வரும் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த 10 நாள் விழாவின் முக்கிய நிகழ்வுகளாக, டிசம்பர் 3ஆம் தேதி அதிகாலை பரணி தீபமும், அன்றைய தினம் மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளன. ஆண்டுதோறும் மகா தீபம் ஏற்றுவதற்காக, 1,150 மீட்டர் காடா துணி, 4,500 கிலோ நெய் பயன்படுத்தப்படும். இந்த மகா தீபம் 11 நாள்கள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும்.

தொடர்புடைய செய்தி