திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று கார்த்திகை தீபத் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலை ஏற்றப்பட்ட பரணி தீபத்தை காணவே கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதையடுத்து மகா தீபம் மாலையில் 2,668 உயரத்தில் ஏற்றப்பட உள்ளது. இதற்காக, கோயில் அடிவாரத்தில் இருந்து, காடாத் துணி மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படுகிறது.