
ஆரணி: அதிமுக பிரமுகர் வீட்டில் செம்மரக்கட்டை.. போலீஸ் விசாரணை
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த மேல் நகரைச் சேர்ந்த அதிமுக மாவட்ட பிரதிநிதி ரவி என்பவருக்குச் சொந்தமான வீட்டில், நேற்று மதியம் 2 டன் எடையுள்ள 106 செம்மரக்கட்டைகளை கண்ணமங்கலம் போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், ரவியின் அண்ணன் மகன் ரமேஷ், ரவியை சிக்க வைக்க செம்மரக்கட்டைகளை அங்கு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள ரமேஷை போலீசார் தேடி வருகின்றனர்.




























