ஆரணி அருகே சிறுமூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த செங்கல் சூளையில் 7 ஆண்டுகளுக்கும் மேலாக கொத்தடிமைகளாக
வேலை செய்து வந்த 19 பேரை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு துணை நீதிபதி விஜயலட்சுமி தலைமையிலான குழுவினர் மீட்டனர். பின்னர் அவர்கள் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் சிவாவிடம் ஒப்படைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்திய கோட்டாட்சியர், சம்பவம் தொடர்பாக செங்கல் சூளை உரிமையாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.