திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இரும்பேடு ஊராட்சி ஏ. சி. எஸ். நகரில் உள்ள ஸ்ரீ பாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரியில், ஏ.சி.எஸ். குழும தலைவர் ஏ.சி.எஸ். அருண்குமார் புதிய கணிப்பொறி ஆய்வகத்தை திறந்து வைத்தார். மேலும், சமூக வலைத் தள பக்கம், கிளப் மேக்சின் மற்றும் கான்பிரன்ஸ் போஸ்டர்களையும் அவர் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் செயலாளர் ஏ.சி. ரவி, எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக டீன் ஸ்டாலின், துணைப் பதிவாளர்கள் பெருவழுதி, சரவணன், முதல்வர் சுதாகர் மற்றும் ஏராளமான ஆசிரிய, மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.