ஆரணி: பெண்ணிடம் 7 சவரன் தாலி செயின் பறிப்பு.

2பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூரைச் சேர்ந்த ஜெயலட்சுமி (45) கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, இருவர் பைக் மூலம் அவரைத் தாக்கி, கழுத்தில் இருந்த 7 சவரன் தாலி செயினைப் பறித்துச் சென்றனர். ஜெயலட்சுமி தடுத்தபோது, அவரைத் தாக்கிவிட்டு மர்ம நபர்கள் தப்பியோடினர். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு போலீசார் மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி