ஆரணி: மழைநீா் தேங்கிய பகுதிகளில் ஆரணி எம்எல்ஏ ஆய்வு.

0பார்த்தது
ஆரணி: மழைநீா் தேங்கிய பகுதிகளில் ஆரணி எம்எல்ஏ ஆய்வு.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் மழைநீா் தேங்கிய இடங்களை தொகுதி எம்எல்ஏ சேவூா் ராமச்சந்திரன் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். வேலப்பாடி ஊராட்சி சிவசக்தி நகரில் பலத்த மழை காரணமாக தெருக்களில் தேங்கியுள்ள மழைநீரால் டெங்கு, மலேரியா பரவும் அபாயம் உள்ளதாகவும், தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் முறையிட்டனா். இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் மூலம் நடவடிக்கை எடுக்க எம்எல்ஏ கோரிக்கை விடுத்தாா்.

தொடர்புடைய செய்தி