திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே எம்.பி. தாங்கல் கிராமத்தில் ரூ. 2.94 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை ஆரணி தொகுதி எம்எல்ஏ சேவூர் எஸ். ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, தொகுதி மேம்பாட்டு நிதியில் இந்த சாலை அமைக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாசம், நகர செயலாளர் அசோக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.