மும்பையில் இருந்து சொந்த ஊரான கள்ளக்குறிச்சிக்கு துக்க நிகழ்வுக்காகச் சென்ற தம்பதி, ஆரணி அருகே நேற்று (பிப்ரவரி 11) அதிகாலை ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. வடமாதிமங்கம் அருகே ரயில் வாசலில் நின்ற சிவகண்டன் (37) தவறி விழ, அவரைப் பிடிக்க முயன்ற மனைவி கலையரசியும் கீழே விழுந்து இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.