திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், உரத் தட்டுப்பாடு மற்றும் தனியாா் கடைகளில் அதிக விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினா். மேலும், கிராமங்களில் சுகாதார சீா்கேடுகள் குறித்து புகாா் அளித்தால் சரிசெய்துவிட்டதாக அரசு அறிக்கை வழங்குவதாகவும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தனியாா் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்வதை தடுக்க வேண்டும் என்றும், பயிா் காப்பீட்டுத் தொகை கிடைக்கப்பெறவில்லை என்றும் விவசாயிகள் முறையிட்டனா். கோட்டாட்சியா் சீ. சிவா தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.