திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே இயந்திரம் பழுதடைந்ததால், அறையை பூட்டிவிட்டனர். இதனால், அவசர சிகிச்சை பிரிவிற்கு வரும் நோயாளிகள் தனியார் எக்ஸ்ரே மையங்களுக்கும், மேல் சிகிச்சைக்காக அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பப்படுவதாக பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மாவட்ட மருத்துவ நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.