ஆரணி: வேதபுரீஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்.

1பார்த்தது
ஆரணி: வேதபுரீஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசப்பாளையம், ஸ்ரீ பாலகுஜாம்பிகா சமேத வேதபுரீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக பல்வேறு பூஜைகள், ஹோமங்கள், யாக சாலை பூஜைகள், யாத்ரா தானம், கடம் புறப்பாடு ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து அனைத்து விமானங்கள் மற்றும் ராஜகோபுரத்திற்கும் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் திமுக மற்றும் அதிமுக தரப்பு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கோயில் அர்ச்சகர், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர், அறங்காவலர் குழுத் தலைவர் உள்ளிட்டோர் ஏற்பாடுகளைச் செய்தனர்.

தொடர்புடைய செய்தி