ஆரணி: மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான மருத்துவ முகாம்.

1பார்த்தது
ஆரணி: மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான மருத்துவ முகாம்.
ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சார்பில், 18 வயது வரையிலான மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. வட்டாரக் கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர் ஆகியோர் முகாமைத் தொடங்கி வைத்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகாமின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். முதன்மைக் கல்வி அதிகாரி மாணவர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையை வழங்கினார். ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், இயன்முறை மருத்துவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.