திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி மக்களின் குடிநீர், தெருவிளக்கு, சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு தொகுப்பை, தொகுதி எம்எல்ஏ சேவூர் எஸ். ராமச்சந்திரன் மாவட்ட திட்ட அலுவலர் மணியிடம் நேரில் வழங்கினார். இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அவர் கேட்டுக்கொண்டார்.