BREAKING: திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது

169பார்த்தது
BREAKING: திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம், அருணாசல மலையின் உச்சியில் ஏற்றப்பட்டது. சுமார் 2,688 அடி உயரத்தில் 3500 கிலோ நெய் நிரப்பபட்ட கொப்பரையில் தீபம் ஏற்றப்பட்டது. அப்போது ஜோதி வடிவமாக அண்ணாமலையார் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வை காண இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர். தற்போது திருவண்ணாமலையில் மழை பெய்தாலும் அதனை பொருட்படுத்தாமல் மகா தீபத்தை, மழையில் நனைந்தபடி பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் வணங்கினர்.

தொடர்புடைய செய்தி