தி.மலை: கார் கால்வாயில் கவிழ்ந்து விபத்து; பசு மாடு உயிரிழப்பு

76பார்த்தது
தி.மலை: கார் கால்வாயில் கவிழ்ந்து விபத்து; பசு மாடு உயிரிழப்பு
கடலூா் பகுதியைச் சோ்ந்த பிரித்திவிராஜ் (வயது 28) என்பவா் சென்னையில் தனியாா் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில் நேற்று காலை பிரித்திவிராஜ், இவரது தந்தை கந்தன், தாய் தனலட்சுமி ஆகிய 3 பேரும் கடலூரில் இருந்து காரில் வேலூருக்குப் புறப்பட்டு சென்றனா். ஆரணி-சேத்துப்பட்டு சாலையில் உள்ள துந்தரிகம்பட்டு பகுதியில் சென்றபோது, காா் கட்டுப்பாட்டை இழந்து அங்கு நின்று கொண்டிருந்த பசு மாடு மீது மோதி ஏரிக் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் வந்த மூன்று பேரும் பலத்த காயம் அடைந்து, ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும் பசு மாடு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது. இந்த விபத்து குறித்து ஆரணி கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொடர்புடைய செய்தி