திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஸ்ரீபாலாஜி கல்வியியல் கல்லூரியில் 19-ஆம் ஆண்டுக்கான வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. 2025-2027ஆம் கல்வியாண்டில் புதிதாகச் சேர்ந்துள்ள மாணவர்களுக்காக நடைபெற்ற இந்த விழாவில், கல்லூரிச் செயலர் ஏ.சி. ரவி தலைமை வகித்தார். எம்ஜிஆர் பல்கலைக்கழக இணைப் பதிவாளர் பெருவழுதி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, குத்துவிளக்கு ஏற்றி வகுப்புகளைத் தொடங்கிவைத்தார். அவர், மாணவர்களுக்குக் கல்வியியல் கல்வியின் முக்கியத்துவம், செயற்கை நுண்ணறிவு, இன்றைய தொழில்நுட்ப உலகில் ஆசிரியர்களின் பங்களிப்பு மற்றும் கல்வியில் அதன் தாக்கம் குறித்துப் பேசினார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.