ஆரணி அருகே ஆயிரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி, பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததால் மனவேதனையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் மாணவியை மீட்டு உடனடியாக ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.