பலமிழந்து காணப்படும் காமக்கூா் எரியின் கரை விவசாயிகள் அச்சம்

0பார்த்தது
பலமிழந்து காணப்படும் காமக்கூா் எரியின் கரை விவசாயிகள் அச்சம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த காமக்கூா் பெரிய ஏரி பலத்த மழையால் நிரம்பி, 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கிறது. இந்த ஏரியின் உபரிநீர் மேலும் 7 ஏரிகளுக்கு செல்கிறது. இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏரிக்கரை பலமிழந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் புகார் அளித்தும் பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. ஏரிக்கரை உடைந்தால், பயிர்கள் சேதமடையும் அபாயம் உள்ளதால், உடனடியாக நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.