திருவண்ணாமலையில் தனியார் பள்ளிப் பேருந்துகளுக்கான கூட்டுத் தணிக்கை பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். வட்டாரப்
போக்குவரத்து அலுவலகத்துக்குட்பட்ட 871 பேருந்துகளில் முதல் நாளில் 364 பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டன. பேருந்துகளில் கேமரா, சிசிடிவி, ஜிபிஎஸ் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் கட்டாயம் இருக்க வேண்டும் என்றும், ஓட்டுநர்கள் விதிமுறைகளை பின்பற்றி மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் ஆட்சியர் அறிவுறுத்தினார்.