ஆரணி ஸ்ரீவிஸ்வரூப பக்த ஆஞ்சநேயா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்.

0பார்த்தது
ஆரணி ஸ்ரீவிஸ்வரூப பக்த ஆஞ்சநேயா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த இரும்பேடு ஹரிஹரன் நகரில் அமைந்துள்ள ஸ்ரீவிஸ்வரூப பக்த ஆஞ்சநேயர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 16 அடிக்கு மேலான உயரத்தில் ஒரே கல்லினால் ஆன ஸ்ரீவிஸ்வரூப பக்த ஆஞ்சநேயர் சுவாமி மற்றும் கருங்கல்லினால் ஆன கருவறை, அர்த்த மண்டபம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. திருப்பணி நிறைவுற்ற நிலையில் நடைபெற்ற இந்த விழாவில் புண்யாவாசனம், கும்ப ஆராதனை, யாகசாலை பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவுக்கு ஆரணி விஸ்வரூப ஆஞ்சநேயர் அறக்கட்டளை மற்றும் இரும்பேடு ஹரிஹரன் நகர் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.