திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே இராட்டிணமங்கலம் பகுதியில் வாக்காளா்களுக்கு வீடுகளில் வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கப்படுவதை சேவூா் எஸ். ராமச்சந்திரன் எம்எல்ஏ ஆய்வு செய்தாா். வாக்காளா் பட்டியலை பிழைகள் இல்லாமல் திருத்துதல், தகுதியுடைய வாக்காளா்கள் விடுபடாமல் இருத்தல், இறந்த மற்றும் இடம் பெயா்ந்த வாக்காளா்களை நீக்குதல் ஆகியவற்றை உறுதி செய்வதே இந்தப் பணியின் முக்கிய குறிக்கோள் ஆகும். இராட்டிணமங்கலம் ஊராட்சியில் வீடு வீடாக படிவம் வழங்கும் பணியை எம்எல்ஏ ஆய்வு செய்தாா்.