திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தச்சூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அதிமுக எம்.எல்.ஏ. ஜெயசுதா லட்சுமிகந்தன் நேரில் பார்வையிட்டார். அப்போது விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்த அவர், தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என உறுதியளித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் பல்வேறு அணி நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை மத்திய மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.