திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட ஆரணி தொகுதி மக்களவை உறுப்பினா் எம். எஸ். தரணிவேந்தன், 386 மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினாா். தலைமை ஆசிரியை குமுதா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கவிதா சங்கா், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் சித்ரா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.