திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம்

66பார்த்தது
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், அய்யம்பாளையம் கிராமத்தில் ரூ. 6 கோடி மதிப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக வருவாய்த் துறை மூலம் நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்பட்டால் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும். பல்வேறு தொற்று நோய்கள் உண்டாகும் என்று அந்தப் பகுதி மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் முடிவை கைவிடக் கோரி, நேற்று (ஜூன் 5) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி. கே. வெங்கடேசன் தலைமை வகித்து கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். அய்யம்பாளையம் கிராமத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை மாசுப்படுத்தும் விதமாகவும் மலை, காடு உள்ளிட்ட இயற்கை வளங்களை அழித்து சுத்திகரிப்பு ஆலை அமைப்பதை கைவிட வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

இதையடுத்து, தங்களது கோரிக்கை மனுவை அளிக்க மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜை விவசாயிகள் சந்திக்கச் சென்றனர். அப்போது, மனுவை வாங்க அதிகாரிகள் யாரும் இல்லாததால் விவசாயிகள் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Job Suitcase

Jobs near you