தி.மலை: ஆட்டு கொட்டகையில் ஆடுகள் திருட்டு

82பார்த்தது
தி.மலை: ஆட்டு கொட்டகையில் ஆடுகள் திருட்டு
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கே.கே. தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன் (76), விவசாயி. இவர் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளையும் வளர்த்து வருகிறார். கடந்த 28-ம் தேதி வழக்கம்போல் தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றுள்ளார். மாலை வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் ஆடுகளை கட்டிப் பூட்டிக்கொண்டு சென்றுள்ளார். பின்னர், இரவில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு பச்சையப்பன் வந்து பார்த்தபோது, பதிவுஎண் இல்லாத மினிவேனில் மர்ம நபர்கள் 2 ஆடுகளை ஏற்றிக்கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

 உடனே அந்த நபர்களைப் பிடிக்க பச்சையப்பன் கத்திக்கொண்டு துரத்திச் சென்றார். ஆனால் அந்த நபர்கள் ஆடுகளை திருடிக்கொண்டு மினிவேனில் தப்பிச்சென்றுவிட்டனர். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் பச்சையப்பன் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து மர்ம ஆசாமிகளை வலைவீசித் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி