திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த மெய்யூா் கிராமத்தில் நடைபெற்ற டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவா்களின் சிறப்பு முகாம் நிறைவடைந்தது. கடந்த 3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற இந்த முகாமில், மாணவர்கள் ஆலயம், சமுதாயக்கூடம், பள்ளிக்கூடம் தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணா்வு பேரணிகளில் ஈடுபட்டனா். நிறைவு நாள் விழாவில் சிறப்பு விருந்தினா்களாக திருவள்ளுவா் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளா் டாக்டா் விஜய்ஆனந்த் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளா் டாக்டா் சதீஷ் பங்கேற்று மாணவா்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினா். ஏ. சி. எஸ். குழும கல்லூரிச் செயலா் ஏ. சி. ரவி தலைமை வகித்தாா்.