வந்தவாசி அடுத்த கீழ்கொவளைவேடு கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி சந்திரா(70). இவருக்கு துரைமுருகன், சுரேஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர். இளைய மகன் சுரேஷுடன் சந்திரா தங்கி வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டுமனை சம்பந்தமாக துரைமுருகனுக்கும், சுரேஷுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது.கடந்த 15ம் தேதி சுரேஷின் வீட்டில் இருந்த சந்திராவிடம் பாகப்பிரிவினை முறையாக செய்யாமல் ஒருதலை பட்சமாக நடந்து கொண்டாயே என கேட்டு தகராறு செய்ததாக தெரிகிறது.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் சந்திராவை துரைமுருகன் தாக்கினாராம். இதில் காயமடைந்த சந்திரா சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து சந்திரா நேற்று வந்தவாசி வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள துரைமுருகனை வலை வீசி தேடி வருகின்றனர்.