தி.மலை: நாடக மேடை திறப்பு விழா.. எம்எல்ஏ பங்கேற்பு

80பார்த்தது
தி.மலை: நாடக மேடை திறப்பு விழா.. எம்எல்ஏ பங்கேற்பு
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த புத்தூர் கிராமத்தில் நாடக மேடை கட்டடம் அமைத்துத் தரும்படி கிராம மக்கள் சார்பில் தொகுதி ஆரணி எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதன் பேரில், தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நாடக மேடை அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, புதிதாக அமைக்கப்பட்ட நாடக மேடையின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சேவூர் எஸ். ராமச்சந்திரன் எம்எல்ஏ கலந்து கொண்டு நாடக மேடையை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலர்கள் திருமால், ஜெயபிரகாஷ், நகரச் செயலர் அசோக்குமார், ஒன்றிய துணைச் செயலர் ஏழுமலை, முன்னாள் ஊராட்சித் தலைவர் செல்வி வரதன், ஒன்றிய நிர்வாகிகள் சின்னபுத்தூர் சுரேஷ், சேகர் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி