திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையான இன்று (நவ.23) கோழி இறைச்சி, ஆட்டு இறைச்சி மற்றும் மீன் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. எலும்பில்லாத கோழிக்கறி கிலோ ரூ. 210, நாட்டுக்கோழிக்கறி கிலோ ரூ. 360, ஆட்டிறைச்சி கிலோ ரூ. 800 என விற்பனை செய்யப்படுகிறது. மீன்களில் கட்லா மீன் கிலோ ரூ. 160, நெத்திலி ரூ. 320, இறால் ரூ. 300 என விற்பனை செய்யப்படுகிறது.