வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி: எம். பி. ஆய்வு.

1பார்த்தது
வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி: எம். பி. ஆய்வு.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் அருணகிரிசத்திரம், ராமகிருஷ்ணாபேட்டை பகுதிகளிலும், ஆரணி ஒன்றியம் துந்தரிகம்பட்டு கிராமத்திலும் வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வீடு வீடாக வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாயிலாக நடைபெறும் இந்தப் பணியை எம். எஸ். தரணிவேந்தன் எம்.பி. ஆய்வு செய்தார். ஆய்வின் போது ஆரணி நகர்மன்றத் தலைவர் ஏ. சி. மணி, முன்னாள் எம்எல்ஏ ஆர். சிவானந்தம், மாவட்ட துணைச் செயலாளர் ஜெயராணி ரவி, தொகுதிச் செயலாளர் எஸ். எஸ். அன்பழகன், நகரச் செயலாளர் வ. மணிமாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி