திருவண்ணாமலை: தொழிலாளி உயிரிழப்பு; இருவா்கைது

558பார்த்தது
திருவண்ணாமலை: தொழிலாளி உயிரிழப்பு; இருவா்கைது
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த காட்டுகாநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த சந்தோஷ்(23) என்பவரை, அவரது நண்பா்களான சக்தி என்கிற சக்திகுமாா்(26) மற்றும் அஜய் (24) ஆகியோா் மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் பீா் பாட்டிலால் அடித்து கொலை செய்தனா். மனைவியை விட்டு பிரிந்து சென்றது குறித்து சந்தோஷ் பேசியதால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. கண்ணமங்கலம் போலீஸாா் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொடர்புடைய செய்தி