செங்கம் அருகே மர்ம விலங்கு கடித்து 25 ஆடுகள் உயிரிழப்பு.

0பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த கோணாந்தாங்கல் கிராமத்தில், குமாரி என்பவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆடு வளர்த்து வருகிறார். நேற்று இரவு மர்ம விலங்கு ஒன்று ஆட்டுக்குள் புகுந்து 25க்கும் மேற்பட்ட ஆடுகளையும் குட்டிகளையும் கடித்துக் குதறி கொன்றுள்ளது. வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதியையொட்டி மர்ம விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், கால்நடைகளுக்குப் பாதுகாப்பு வழங்கவும், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு இழப்பீடு வழங்கவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி