செங்கம்: கஞ்சா விற்ற 3 இளைஞர்கள் கைது

288பார்த்தது
செங்கம்: கஞ்சா விற்ற 3 இளைஞர்கள் கைது
செங்கம் அருகே சின்னகாயம்பட்டு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்ட போதை தடுப்பு பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் அறிவழகன் (22), அபிஷேக் (23), விஜயபிரதாப் (26) ஆகியோர் சிக்கினர். அவர்களிடமிருந்து அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து செங்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. போதைப்பொருள் விற்பனையை தடுக்கும் நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி