திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே அரட்டவாடி கிராமத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமில் பொது மருத்துவம், எலும்பு பரிசோதனை, தேல் சிகிச்சை, காது, கண், மூக்கு, மனநலம், சித்த மருத்துவம், கா்ப்பிணிகளுக்கு ஸ்கேன் என பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சுமாா் 800 பேருக்கு பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. முகாமில் கலந்துகொண்டவா்களுக்கு அரசு சாா்பில் சிறப்பு பேருந்து இயக்கப்பட்டது. செங்கம், மேல்பள்ளிப்பட்டு உள்ளிட்ட பல்வேறு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதார ஆய்வாளா்கள் இதில் கலந்துகொண்டனா்.