திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, தண்டராம்பட்டு மத்திய ஒன்றிய திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி தலைமையில் தண்டராம்பட்டில் தலைவர் கருணாநிதியின் படத்திற்கு மலர் தூவியும்,பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்தும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியும் கொண்டாடப்பட்டது.
ஒன்றிய கழக செயலாளர் கோ. இரமேஷ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில்,மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் வேலு, மு. ஒன்றிய செயலாளர் சி. ஜெயராமன், ஒன்றிய கழக நிர்வாகிகள் சி. பன்னீர்செல்வம், எஸ் ஜோதி, து. வெங்கடேசன், பி. நவாஸ்கான், கல்பனா ஜோதி, கிருஷ்ணமூர்த்தி, நகர செயலாளர் அ. சுப்பிரமணி, மாவட்ட துணை அமைப்பாளர்கள் தண்டராம்பட்டு ரவி, எஸ். சதீஷ்குமார், வே. பிரவீன்குமார், ஆ. மாதேஸ்வரன், மணிகண்டன், ஜெயபிரகாஷ், சுரேஷ், பொன்னுசாமி, தருமன், உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, திமுக கட்சி நிர்வாகிகள், பலர் கலந்து கொண்டனர்.