செங்கம்: பாமக மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம்.

2பார்த்தது
செங்கம்: பாமக மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகராட்சியில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிப்படைவதைக் கண்டித்து, வரும் 16-ஆம் தேதி பாமக சார்பில் நகராட்சி நிர்வாக அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என பாமக மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கால்நடைகளை வரும் 15-ஆம் தேதிக்குள் பிடிக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும், தருமபுரியில் நடைபெறும் பாமக தலைவர் அன்புமணியின் நடைப்பயணம் நிறைவு விழாவில் திருவண்ணாமலை மேற்கு மாவட்டத்திலிருந்து கட்சியினர் திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. உறுப்பினா் சோ்க்கையை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி