திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே மண்மலை பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை அரசுப் பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் காரில் இருந்த ஓட்டுநர் நாகேந்திரா (45) உட்பட 6 பேர் பலத்த காயமடைந்தனர். பெங்களூரில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த காரும், திருவண்ணாமலையில் இருந்து செங்கத்தை நோக்கி வந்த பேருந்தும் மோதிக்கொண்டன. காயமடைந்த 6 பேரும் செங்கம் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, பின்னர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து செங்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.