செங்கம்: பள்ளி மழலையா்களுக்கு பட்டமளிப்பு விழா

77பார்த்தது
செங்கம்: பள்ளி மழலையா்களுக்கு பட்டமளிப்பு விழா
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த முறையாறு பகுதியில் உள்ள நிவேதா மெட்ரிக் பள்ளியில் எல். கே. ஜி. , யூ. கே. ஜி. மாணவர்களுக்கு மாதிரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சி தொடக்க விழாவுக்கு நிர்வாகக் குழுச் செயலர் கோபி தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர் சங்கர், பொருளாளர் ராமஜெயம் முன்னிலை வகித்தனர். 

பள்ளி முதல்வர் ஹேமநாதன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பள்ளியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நடேசன், அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்திப் பேசினர். நிகழ்ச்சியில் நிர்வாகக் குழு உறுப்பினர் நாராயணன், பிரசாந்த், கலையரசன் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி