திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த இறையூரில் திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கான செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட செங்கம் எம்எல்ஏ மு. பெ. கிரி, தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை பிற மாநிலங்களும் பின்பற்றி செயல்படுத்தி வருவதாக பெருமிதம் தெரிவித்தார். கூட்டத்திற்கு செங்கம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மத்திய ஒன்றியச் செயலாளர் ஏழுமலை வரவேற்றார்.