செங்கத்தை அடுத்த துரிஞ்சிகுப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் மாணிக்கவேல், சில மாதங்களாக மாணவிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 20-ஆம் தேதி ஒரு மாணவியிடம் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகத் தகவல் வெளியானது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகம் மற்றும் கல்வி அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, திங்கள்கிழமை பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியருக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். செங்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.